ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் பொன்விழா ஆண்டிற்கான இல்லமெய்வல்லுநர் திறனாய்வு விழா
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் 2024ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனநர் திறனாய்வு விழா நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, நேற்று (2024.03.27) அன்று பிற்பகல் 2.30 மணியளவில் விருந்தினர் வரவேற்றலுடன் ஆரம்பமாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, விளையாட்டு நிகழ்வுகளும் பரிசளிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
முதல் இடம்
அதேவேளை, விழாவின் தலைவராக பாடசாலை அதிபர் சின்னப்பா நாகேந்திராசா, பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி வரதராசா சுரேந்திரன் கௌரவ விருந்தினர்களாக வைத்திய கலாநிதி இராசசேகரம் இராஜசீலன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இவ்வருட விளையாட்டு விழாவில் நீலாம்பரம், செவ்வந்தி, செந்தாமரை இல்லங்களில் செந்தாமரை இல்லம் 10 வருடங்களுக்கு பின் முதல் இடத்தை பெற்றது அனைவராலும் பாராட்டப்பட்ட விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |