சுதந்திரக் கட்சிக்கு யாரும் உரிமை கோர வேண்டாம்: துமிந்த திசாநாயக்க வலியுறுத்து
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அந்நியர்கள் அல்லது புதியவர்கள் உரிமை கோர வேண்டாம் என்று அக்கட்சியின் பதில் செயலாளர் துமிந்த திசாநாயக்க (Duminda Dissanayake) வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில்(Colombo) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற தடை உத்தரவு
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“சுதந்திரக் கட்சிக்கு நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) தற்போதைக்கு பதில் தலைவராக சட்டரீதியான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதனை எதிர்த்தவர்கள், அல்லது தலைமைத்துவ மோசடி செய்ய முயன்றவர்களுக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக அவர்கள் சுதந்திரக் கட்சி தொடர்பில் எதுவித உத்தியோகபூர்வ தீர்மானத்தையும் மேற்கொள்ள முடியாது.
நிமல் சிறிபால டி சில்வாவே இனிவரும் காலங்களில் சுதந்திரக்கட்சியின் சட்டரீதியான தலைவராக செயற்படுவார். அதில் மாற்றங்கள் இருக்காது.
எனவே கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றுவது தொடர்பில் அந்நியா்கள் அல்லது புதியவர்கள் முயற்சிகளை மேற்கொள்ளவோ, உரிமை கோரவோ வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |