பல கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்: பொலிஸார் விசாரணை
பியகம மற்றும் மஹரகம ஆகிய பகுதிகளில் சுமார் 35 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பியகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்றிரவு (26) பண்டாரவத்த பகுதியில் மகிழுந்து ஒன்றை சோதனையிட்ட போது போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, 15 கிலோகிராம் 81 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 14 கிலோகிராம் 527 மில்லிகிராம் ஹேஷ் ரக போதைப்பொருள் மற்றும் 941 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

16 கோடி ரூபாய் போதைப்பொருள் மீட்பு
அதன்போது மகிழுந்தில் இருந்த கடுவலை - பொமிரிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மஹரகம - நாவின்ன பகுதியில் 8 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 45 வயதுடைய ஒருவரெனவும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 16 கோடி ரூபாய் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri