காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி
குளியாபிட்டி பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் தனது காதலியின் வீட்டுக்கு சென்று காணாமல்போன சம்பவமென்று பதிவாகியுள்ளது.
குளியாப்பிட்டிய, கபலாவ பகுதியை சேர்ந்த 36 வயதுடைய சுசித ஜயவன்ச என்பவரே 6 நாட்களாக காணாமல்போயுள்ளார்.
உணவுக்கடை உரிமையாளரான இவர் கடந்த 22 ஆம் திகதி குளியாப்பிட்டி வஸ்ஸாஉல்ல பிரதேசத்தில் உள்ள தனது காதலியின் வீட்டிற்கு தனது கடையின் ஊழியர் ஒருவருடன் சென்றுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதன்போது குறித்த வீட்டிற்கு சென்றதிலிருந்து அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லையென விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞர் சென்றதாக கூறப்படும் வீட்டின் உரிமையாளரிடமிருந்து நண்பரொருவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
இந்நிலையில், காணாமல்போனதாக கூறப்படும் சுசிதாவின் நண்பர் தெரிவித்துள்ளதாவது, "செவ்வாய்கிழமை இரவு 7:58 மணிக்கு சிகிடி (காதலியின் தந்தை) என்ற நபரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, ஒரு தந்தையாக என் மகளுக்கு நன்மை செய்துள்ளேன். அவனை நான் கொன்றுவிட்டேன், இனி அவனால் திரும்பி வர முடியாது’என்று கூறியதாக குறித்த நண்பர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகத்திற்கிடமான முறையில் காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
