செங்கடலில் தொடரும் பதற்றம்: பிரிட்டன் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்
செங்கடல் வழியாக சென்ற 'ஆண்ட்ரோமேடா ஸ்டார்' என்ற பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுதி இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் யாஹ்யா சரேயா அறிவித்துள்ளார்.
குறித்த தாக்குதலானது நேற்று(26) மேற்கொள்ளப்பட்டமையை அமெரிக்க இராணுவம் இன்று(27.04.2024) உறுதி செய்துள்ளது.
சிறிய அளவில் சேதம்
இதன்படி பிரிட்டனுக்கு சொந்தமான 'ஆண்ட்ரோமேடா ஸ்டார்' கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும்.

இந்த தாக்குதலில் கப்பலுக்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர்.

அதன் எதிரொலியாக செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
ஆதி பிளாக் மெயில் செய்ததால் தற்கொலை செய்துகொண்டு இறந்த இலங்கை பெண்... தாமரைச்செல்வி ஷாக்கிங் நியூஸ் Cineulagam
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri