கனடாவில் ஆடம்பர வீடுகளின் விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கனடாவில் ஆடம்பர வீடுகளின் விற்பனை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் ஆடம்பர வீடுகளின் விற்பனை 32 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
Sotheby’s International Realty என்னும் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புள்ளி விபரத்தில் உள்வாங்கப்படாத தகவல்
இந்த ஆண்டில் 4 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான 181 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது குறைந்த எண்ணிக்கையிலானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிடமிருந்து வீடுகளை கொள்வனவு செய்வதனை தவிர்த்து சிலர் தனிப்பட்ட ரீதியில் வீடுகளை கொள்வனவு செய்வதனால் அவை புள்ளி விபர தகவல்களில் உள்ளடங்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |