யாழ். பொலிஸ் அதிகாரி கொலை வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரை நீதிமன்றம் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தாலும், பிரதான சந்தேக நபர் தேடப்பட்டு வந்தார்.
9ஆம் திகதி வரை விளக்கமறியல்
நேற்று (02.04.2026) அவர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் வழிகாட்டியுடன் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, நீதிமன்றம் அடையாள அணிவகுப்பை நடத்தும் விதமாக சந்தேக நபரை 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
கடந்த சனிக்கிழமை கொடிகாமம் - கெற்பேலி பகுதியில், சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்ற இடத்திற்கு சென்ற கொடிகாமம் பொலிஸ் நிலையத்தின் இரண்டு உத்தியோகஸ்தர்களின் மீது மணல் ஏற்றிச் செல்லும் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர்! குறிவைக்கப்பட்ட ஈரானின் எஞ்சிய பகுதி - தொடரும் அமெரிக்காவின் எச்சரிக்கை
உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்