பிரபல வங்கி முகாமையாளர்கள் கைது விவகாரம்! அமைச்சர் வெளிப்படுத்திய தகவல்கள்
சட்டவிரோதமான முறையில் உண்டியல் முறை ஊடாக நாட்டிலிருந்து பல பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இன்று (18) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக அனுப்பியுள்ள பணம்
ஜனவரி மாதம் சுங்க மேலதிக பணிப்பாளர் நாயகத்தினால் நிதி குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (FCID) செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இவர்கள் சிக்கியுள்ளனர்.

இதற்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்றப் விசாரணை பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட நான்கு முகாமையாளர்களும் 89 கணக்குகள் ஊடாக 10,151 தடவைகளில் சட்டவிரோதமாக பணத்தை அனுப்பியுள்ளமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த ஜூன் 19 ஆம் திகதி நீர்கொழும்பு பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் 4 வங்கி முகாமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் நீதிமன்றத்தில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam