உலக சந்தையில் அதிரடியாக உயர்ந்த எண்ணெய் விலை! இலங்கையின் பெட்ரோல் மற்றும் டீசல் தயாரிப்புகளில் சிக்கல்
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஒரு பெரல் WTI கச்சா எண்ணெயின் விலை 11.41 சதவிகிதம் அதிகரித்து, 111.54 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
சடுதியான உயர்வு
அதேபோல், பிரென்ட் கச்சா எண்ணெயின் விலையும் 109 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளதுடன்,இவை சடுதியான உயர்வாக கூறப்படுகின்றது.

இதற்கிடையில், ஒரு பெரல் முர்பான் கச்சா எண்ணெயின் விலை 114.84 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
இந்த முர்பான் கச்சா எண்ணெய் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது எனவும், கடந்த காலத்தில் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றாகவும் காணப்படுகின்றது.
எரிபொருள் தயாரிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உற்பத்தி செய்யப்படும் இந்த கச்சா எண்ணெய், தூய்மையாகவும், இலகுவாகவும், குறைந்த கந்தக உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாலும், சுத்திகரிப்பதற்கு மிகவும் பொருத்தமானதாகும்.
பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் போன்ற தயாரிப்புகளுக்கும் இது மிகவும் பயன்படுத்தப்பட்டதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
you may like this
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam