சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட சாமர சம்பத் எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை நாடாளுமன்ற சபையிலிருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று காலை ஒன்பது மணிக்கு நாடாளுமன்றத்தின் வழமையான அமர்வு ஆரம்பமாகியிருந்தது.
அவசரமாக 4000 வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப் பெற்ற பிரபல தொழிலதிபர்கள்! இரகசியம் கசிந்தது எப்படி..
ஒழுங்குவிதிக்கு புறம்பான முறை
அதன் பின்னர் சபை ஒழுங்குவிதிகளுக்குப் புறம்பான முறையில் நடந்து கொண்ட காரணத்தினால் சாமர சம்பத்தினை நாடாளுமன்ற அரங்கில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சபையை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்கு தடங்கல் ஏற்படுத்துவதாக கூறியே சாமர சம்பத் எம்.பி.யை அவ்வாறு வெளியேற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து நாடாளுமன்றத்தின் படைக்கல சேவிதர் அலுவலர்களினால் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் சபையில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
வீட்டுப் பத்திரம் தர மீனாவிற்கு செக் வைத்த சிந்தாமணி, என்ன செய்யப்போகிறார்?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam