தேரர்களின் கௌரவத்தை நான் பாதுகாத்தே தீருவேன் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதிமொழி

Sajith Premadasa Sri Lanka Ranasinghe Premadasa
By Rakesh Oct 11, 2026 04:38 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சம்புத்த சாசனத்துக்கும் பௌத்த மதத்துக்கும் முதன்மை ஸ்தானத்தைப் பெற்றுக்கொடுத்து, அதைப் பாதுகாத்து, போற்றி முன்னேற்றி, ஏனைய மதங்கள், இனங்கள் மற்றும் கலாசாரங்களுக்கும் உரிய இடத்தையும் நிலைபேறுத்தன்மையையும் பாதுகாப்பையும் அவர் பெற்றுக் கொடுத்தார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து முன்னோக்கி எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பேன் என அவர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

"புத்தசாசன அமைச்சைப்போலவே, ஏனைய மதங்கள் மற்றும் இனங்கள் தொடர்பில் கருத்தில் கொண்டு தனித்தனியான இராஜாங்க அமைச்சுகளையும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவே உருவாக்கினார்.

இவ்வாறு உருவாக்கியதன் மூலம் அந்த மதங்கள், கலாசாரங்கள் மற்றும் இனங்களுக்கும் உரிய பாதுகாப்பைப் பெற்றுக்கொடுக்க முடிந்தது. எதிர்காலத்திலும் இவ்வாறான நடவடிக்கைகளே இடம்பெற வேண்டும். ஒரே நாட்டில் ஒரே குடிமக்களாக முற்போக்குத் தேசியவாதத்துடன் ‘இலங்கையர்' என்ற அடையாளத்தை முதன்மைப்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேரரைச் சந்தித்து ஆசி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று சியாம் மகா நிகாயவின் கோட்டே ஸ்ரீ கல்யாணி சமக்ரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரரும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தரும், பன்னிப்பிட்டிய, ருக்மலேவில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம விஜயலோக மகா விகாரையின் தலைமை விகாராதிபதியுமான சங்கைக்குரிய கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.

தேரர்களின் கௌரவத்தை நான் பாதுகாத்தே தீருவேன் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதிமொழி | Opposition Leader Sajith Premadasa S Pledge

பின்னர் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார். தொடர்ந்து இங்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். "நாட்டின் ஒருமித்தப்பாடு, நிலப்புல ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் அரசியல் சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் அரசமைப்பில் உள்ள நாட்டின் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும். பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பது போலவே ஏனைய மதங்கள், இனங்கள் மற்றும் கலாசாரங்களைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மகா சங்கத்தினரைப் போலவே ஏனைய மதங்களின் மதத் தலைவர்களுக்கும் உரிய கௌரவங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அரசமைப்பின் ஊடாகவும் சம்புத்த சாசனத்துக்குச் சிறப்பு ஸ்தானம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை மறந்துவிடக் கூடாது. இந்தக் கொள்கையிலேயே ஐக்கிய மக்கள் சக்தி நிற்கின்றது.

மேலும், தற்சமயம் மகா சங்கத்தினரையும் காவியுடையையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அவமதிப்புச் சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற விடயங்களைச் செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் காணப்படுகின்றன. இந்த விதிமுறைகளைக் கண்டறிந்து, உணர்வுப்பூர்வமான விடயங்களை ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பரிந்துரைகளைப் பெற்று, பொருத்தமில்லாத செயற்பாடுகளைச் சரி செய்துகொள்ள வேண்டும்.

தேரர்களின் ஆசிகள் மற்றும் வழிகாட்டல்

சம்புத்த சாசனத்தைப் பாதுகாக்கும் காவல் தெய்வங்களான மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட ஏனைய தேரர்களின் ஆசிகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு ஏற்பச் செயற்படுவேன். பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கு நான் எப்போதும் ஒரு நடைமுறை பௌத்தராக முன்னிற்பேன். பௌத்த மதத்தைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் அடைவதற்குப் பதிலாக, செயல்கள் மற்றும் பணிகளின் மூலம் பௌத்தராக இருக்க நடவடிக்கை எடுப்பேன். உண்மையான பௌத்தராக நடந்துகொள்ளும்போது ஏனைய மதங்கள், இனங்களுக்கு நிந்தனை செய்யும், அவற்றை அகௌரவப்படுத்தும் எண்ணம் மனதில் எழாதல்லவா என்றார்.

தேரர்களின் கௌரவத்தை நான் பாதுகாத்தே தீருவேன் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதிமொழி | Opposition Leader Sajith Premadasa S Pledge

இங்கு கருத்துத் தெரிவித்த சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர், "வரலாற்றுக்காலம் தொட்டே நமது நாடு ஒரு பௌத்த நாடாகத் திகழ்கின்றது. பௌத்த மதத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும். வரலாற்றுக்காலம் தொட்டே நாடு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பௌத்த மதத்தை முதன்மைப்படுத்திய முன்னேற்றங்களையே அடைந்துள்ளது.

இலங்கையின் மூன்று பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட 99 வீதமான பௌத்த பிக்குகள், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கலகொட அத்தே ஞானசார தேரரின் காவியுடையைக் களைவதற்கு முன்னர், அவர் சார்ந்திருக்கும் கோட்டே ஸ்ரீ கல்யாணி சமக்ரி தர்ம மகா சங்க சபையிடம் ஆலோசித்திருக்க வேண்டிய கடமை காணப்பட்டிருந்தது. ஒரு பௌத்த துறவியின் காவியுடையைக் கழற்றும் அதிகாரம் மகா சங்கத்தினருக்கு மாத்திரமே காணப்படுகின்றது" என்றார்.

பரபரப்பாகும் சவூதி விமான நிலைய தாக்குதல்! 12 பேர் பலி - பலரின் நிலைமை கவலைக்கிடம்: மூடப்படும் வான்வெளிகள்

பரபரப்பாகும் சவூதி விமான நிலைய தாக்குதல்! 12 பேர் பலி - பலரின் நிலைமை கவலைக்கிடம்: மூடப்படும் வான்வெளிகள்

பாரியளவு போதைப்பொருளுடன் சிஐடியிடம் சிக்கிய ஷிரான் பாசிக்கின் நெருங்கிய சகா

பாரியளவு போதைப்பொருளுடன் சிஐடியிடம் சிக்கிய ஷிரான் பாசிக்கின் நெருங்கிய சகா

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US