டீசல் இறக்குமதியிலும் மோசடியா..! அநுர ஆட்சியில் அடுத்தடுத்து எழும் குற்றச்சாட்டுக்கள்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட டீசல் இறக்குமதியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு கோரி இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் இணைந்து கொடுக்கப்பட்ட இந்த முறைப்பாடு இன்று(27.04.2026) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டீசல் மோசடி குற்றச்சாட்டு
குறித்த சம்பவத்தினால் அரசாங்கத்திற்கு பெருமளவிலான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டின் ஊடாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விபரங்களைக் கோரி, உரிய ஆவணங்களைப் பரிசோதித்து, பாரிய நஷ்டம் அல்லது மோசடி இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
அத்துடன், அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ள முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
YOU MAY LIKE THIS VIDEO


இமயமலைக்கு அடியில் பிளவுபட்டு கொண்டிருக்கும் இந்திய தட்டு- புதிய புவியியல் கண்டுபிடிப்பு News Lankasri