இலங்கையில் காணிகளை வைத்திருப்போருக்கான அறிவிப்பு - அரசாங்கத்தின் அதிரடி திட்டம்
இலங்கை வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில் அரசாங்கம் ஒரு புதிய திட்டமொன்றை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி டித்வா சூறாவளியால் அனர்த்தத்தால் வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்த குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் தற்போது நடைபெற்று வருவதோடு, அதற்காக நாடு பூராகவும் உள்ள நன்கொடையாளர்களுக்கு காணிகளை நன்கொடையாக வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
www.rebuildingsrilanka.gov.lk என்ற இணையத்தளத்தில் அல்லது 1800 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம் இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு
காணி நன்கொடையாளர்கள் பற்றிய தகவல்களை 0112331246 என்ற தொலைநகல் (Fax) இலக்கத்திற்கு அனுப்பி வைக்கலாம்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எந்தவொரு பிரஜையையும் கைவிடாது, அவர்களின் வாழ்க்கையை முன்பை விட உயர்ந்த தரத்திற்கு மீண்டும் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரசு காணிகளை கையகப்படுத்தல் (acquisition) அல்லது சட்ட ரீதியாக காணிகளை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளே இடம்பெற்று வந்துள்ளதாக இணையவழி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அரசாங்கத்திடமிருந்து காணி நன்கொடை கோரும் அறிவிப்புகள் இதுவரை கிடைக்காத நிலையே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
