அதிகாரப் பகிர்வுடன் தீர்வு வழங்கி நாட்டைக் கட்டியெழுப்பச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது: சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து
நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு நல்லதோர் சந்தர்ப்பம் வாய்த்திருக்கின்றது. எனவே, தோல்வியுற்ற இனவாத சிந்தனைக்குள் தொடர்ந்தும் மூழ்கியிருக்காமல் இலங்கையை முன்னேற்றுவதற்கான சந்தர்ப்பத்தை தென்னிலங்கை அரசியல் சமூகம் நழுவ விடாமல் பற்றிப்பிடித்துக்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடாக அறிக்கையொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நல்லதோர் சந்தர்ப்பம் ஏற்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்விடயம் தொடர்பாக உள்நாட்டிலும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடனும் பேசவிருப்பதாகவும் இதனைத் தமிழர் தரப்பு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றார்.
புதிய அணுகுமுறை

இந்நிலையில், புதுடில்லியில் இருக்கக்கூடிய இலங்கைத் தூதுவரான மிலிந்த மொரகொடவும் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண புதிய அணுகுமுறை, புதிய பேச்சுகள் தேவை.
இவர்கள் இருவருமே பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் குரல்கொடுத்து வருபவர்கள். மாகாண சபை முறைமை என்பது வெள்ளை யானை என்றும், அது இலங்கைக்குத் தேவையற்ற ஒன்று என்றும் இவர்கள் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டு வருகின்றார்கள்.
இவர்களது புதிய அணுகுமுறை, புதிய பேச்சு என்பது பதின்மூன்றாவதையும் இல்லாமல் செய்வதற்கான முயற்சியா, அல்லது அதற்கு மேல்சென்று தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒருவழிமுறையா, என்ற கேள்வி எழுகின்றது.
நல்லாட்சி அரசாங்கம்
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, அதில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கின்றோம் என்ற பெயரில் சில விடயங்களும் உள்ளடக்கப்பட்டன.
முன்புள்ள அரசாங்கத்தில் இதற்கான வழிநடத்தல் குழுவொன்றும் அமைக்கப்பட்டது.
இந்த குழு 83 முறை கூடியும் எத்தகைய முடிவையும் எட்டாமல் வெறும் காலம் கடத்தும் செயற்பாடாக அமைந்தது மட்டுமின்றி, அந்த முயற்சி குப்பைக்கூடைக்குள் போடப்பட்டது.

இப்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கக்கூடிய பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் அதிலிருந்து வெளியேறியிருக்கும் விமல் வீரவன்ச, உதயகம்மன்பில போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதம மந்திரி பதவி வகிக்கின்ற தினேஷ் குணவர்த்தன போன்றவர்களும், தமிழ் மக்களுக்கு எவ்வித உரிமைகளும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டவர்கள்.
தாங்கள் சிங்கள மக்களின் வாக்குகளினாலேயே வென்றதாகவும், எனவே தாங்கள் சிங்கள மக்களின் பிரதிநிதிகள் என்றும் ஓங்கிக் குரல் கொடுத்து வருபவர்கள்.
ரணில் விக்ரமசிங்கவோ பொதுஜன பெரமுனவின் ஆதரவில் ஜனாபதி பதவியை வகிக்கின்றவர்.
தனது ஆட்சிக்காலத்திலேயே ஒரு புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டுவர முடியாத ஒருவர் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டவாறு இனவாதிகளைக் கொண்டிருக்கும் இந்த அரசில் புதிய அரசியல் சாசனத்தை இவரால் கொண்டுவரமுடியுமா, அதற்கு இந்த இனவாத சக்திகள் இடம்கொடுக்குமா, எம்மைப் பொறுத்தவரையில், தமிழ் மக்களை இன்னுமொருமுறை ஏமாற்றுவதற்கான முயற்சிகளின் ஆரம்ப கட்டமே இந்த நாடகம்.
இலங்கை அரசாங்கத்துக்கு ஆலோசனை
இத்தகைய நாடகங்களை ஏற்கனவே பலமுறை தமிழ் மக்கள் கண்டிருக்கின்றார்கள். உண்மையாகவே தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்பது இந்த நாடு பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்கு முக்கியமான ஒருவிடயமாகும். உலக நாடுகள் பலவும் இலங்கை அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்கியிருப்பதாகவே நாங்கள் அறிகின்றோம்.
ஆகவே இந்த நாட்டின் உண்மையான தேசபக்தர்களாக இருந்தால், இந்த நாட்டை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து ஓரளவேனும் காப்பாற்ற விரும்பினால், இந்த நாட்டின் பிரஜைகளான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என நீங்கள் கருதினால், பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் உங்களது தீர்வுகள் அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri