இலங்கை மாணவர்களுக்கு வெளிநாடொன்றில் கிடைக்கவுள்ள வாய்ப்பு
உயர் கல்வி ஒத்துழைப்புக்களுக்கான கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை பட்டதாரி மாணவர்களுக்கு பட்டப்பின் படிப்புக்கான புலமைப்பரிசில் வாய்ப்புக்கள் உள்ளிட்ட உயர்கல்விக்கான ஒத்துழைப்புக்களை உருவாக்குவதற்காக, உலகளாவிய ரீதியில் தரப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் முதன்னிலையை வகிக்கின்ற சிங்கப்பூர் குடியரசின் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தில்
உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதன் மூலம் இலங்கை மாணவர்களுக்கு சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் உள்ளிட்ட பட்டப்பின் படிப்புக்களை மேற்கொள்வதற்கும், இயலளவு விருத்தி நிகழ்ச்சித் திட்டங்களில் பங்கெடுப்பதற்கும், ஒருங்கிணைந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
