கனேடிய பொதுத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி உட்பட மூன்று தமிழர்கள் வெற்றி
2025 கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி உட்பட மூவர் வெற்றி பெற்றுள்ளனர்.
கனேடிய பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (28) நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் விபரல் கட்சியின் சார்பில் மூவரும், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் இருவரும், பசுமை கட்சியின் சார்பில் ஒருவரும் என மொத்தம் ஆறு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகி..
இவர்களில் விபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மூன்று தமிழர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
Oakville கிழக்கு தொகுதியில் அனிதா ஆனந்த், Scarborough-Guildwood-Rouge Park தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி, Pickering–Brooklin தொகுதியில் ஜுனிதா நாதன் ஆகியோர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.
இதுவரை வெளியான உத்தியோகபற்றற்ற முடிவுகளின் அடிப்படையில் அனிதா ஆனந்த் 28,498 (50.4%) வாக்குகளையும், ஹரி ஆனந்தசங்கரி 33,164 (63.9%) வாக்குகளையும்,, ஜுனிதா நாதன் 24,951 (53.2%) வாக்குகளையும் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.
கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில்
இந்தத் தேர்தலில் அதிக ஆசனங்களை வெற்றி பெற்று லிபரல் கட்சி சிறுபான்மை ஆட்சி அமைத்துள்ள நிலையில் மீண்டும் அனிதா ஆனந்த், ஹரி ஆனந்தசங்கரி ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை இந்தத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் Markham-Stouffville தொகுதியில் போட்டியிட்ட நிரான் ஜெயநேசன், Markham -Thornhill தொகுதியில் போட்டியிட்ட லியோனல் லோகநாதன், பசுமை கட்சியின் சார்பில் Etobicoke வடக்கு தொகுதியில் போட்டியிட்ட சருன் பாலரஞ்சன் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
