நாடளாவிய ரீதியில் 2 இலட்சத்து 14 ஆயிரம் பேர் கைது! பொலிஸ் தலைமையகத்தின் அறிவிப்பு

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Rakesh Jun 27, 2026 01:17 AM GMT
Report

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்பை முற்றாக ஒழிக்கும் நோக்குடன் அரசால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் 'முழு நாடுமே ஒன்றாக' விசேட தேசிய செயற்திட்டத்தின் கீழ், இதுவரை 2 இலட்சத்து 14 ஆயிரத்து 333 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்தத் தேசிய திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வரையிலான காலப்பகுதியில், முப்படைகள் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பங்களிப்புடன் நாடு முழுவதும் 2 இலட்சத்து 15 ஆயிரத்து 526 விசேட சோதனை நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பரதநாட்டிய கின்னஸ் சாதனை நிகழ்வில் பாரிய பண மோசடி! என்பிபி அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு

பரதநாட்டிய கின்னஸ் சாதனை நிகழ்வில் பாரிய பண மோசடி! என்பிபி அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு

விசேட சோதனை நடவடிக்கைகள்

இந்தச் சுற்றிவளைப்புகளின் போதே மேற்படி பெருமளவிலான சந்தேகநபர்கள் வலைவீசிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஒட்டுமொத்த சந்தேகநபர்களில், பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் சர்வதேச வலைப்பின்னல்களுடன் தொடர்புடைய 3 ஆயிரத்து 112 பிரதான குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றங்களின் ஊடாக முறையான 'தடுத்து வைக்கும் உத்தரவுகள்' பெறப்பட்டு தீவிர விசாரணைகள் முடுக்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் 2 இலட்சத்து 14 ஆயிரம் பேர் கைது! பொலிஸ் தலைமையகத்தின் அறிவிப்பு | Operation Whole Nation Together People Arrested

அதேவேளை, போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்கள், காணிகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களைச் சேர்த்ததாகக் கண்டறியப்பட்ட 360 முக்கிய புள்ளிகளின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் தொடர்பாக, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுரேஷ் சலேவுக்காகக் கூச்சலிடும் அரசியல் அநாதைகள்! பிரதி அமைச்சர் சுனில் வட்டகல சாடல்

சுரேஷ் சலேவுக்காகக் கூச்சலிடும் அரசியல் அநாதைகள்! பிரதி அமைச்சர் சுனில் வட்டகல சாடல்

 பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

இதேவேளை, இந்தச் சோதனை நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் பழக்கத்துக்குத் தீவிரமாக அடிமையாகிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட 2 ஆயிரத்து 188 பேர், அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் உரிய புனர்வாழ்வு சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தேசிய செயற்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, இலங்கை வரலாற்றில் மிக அதிகளவிலான போதைப்பொருள் தொகுதிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் 2 இலட்சத்து 14 ஆயிரம் பேர் கைது! பொலிஸ் தலைமையகத்தின் அறிவிப்பு | Operation Whole Nation Together People Arrested

அதன்படி சுமார் 1,964 கிலோகிராம் ஹெரோயின், 2 ஆயிரத்து 120 கிலோகிராம் ஐஸ், 289 கிலோகிராம் கொக்கைன், 5 ஆயிரத்து 818 கிலோகிராம் கஞ்சா, 479 கிலோகிராம் குஷ் மற்றும் 312 கிலோகிராம் ஹஷிஸ் உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கையின் எதிர்காலச் சந்ததியினரைப் போதைப்பொருள் அரக்கனிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு, பாதுகாப்பு அமைச்சின் நேரடி வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் இந்த 'முழு நாடுமே ஒன்றாக' விசேட ஒபரேஷன், எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி வரும் நாள்களிலும் மேலும் தீவிரமாகத் தொடரும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ஊழல் மற்றும் மோசடி வழக்குகளில் அதிரடி காட்டும் அரசாங்கம் ..!

ஊழல் மற்றும் மோசடி வழக்குகளில் அதிரடி காட்டும் அரசாங்கம் ..!

4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US