தாழிறங்கிய வேத்துச்சேனை பகுதி வீதி! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Batticaloa Climate Change Weather
By Kumar Feb 21, 2026 01:04 PM GMT
Report

மட்டக்களப்பு நவகிரிகுளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேசத்தில் வேத்துச்சேனை பகுதியில் வீதி தாழிறங்கியுள்ளது.

இந்தநிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையினால் உடனடியாக குறித்த வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நவகிரி குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து, அதன் வான் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து வெளியேறிய வெள்ள நீரினால் மட்டக்களப்பு வெல்லாவெளி வேத்துச்சேனை பிரதான வீதி இன்று (21.02.2026)ஆம் திகதி மீண்டும் சேதமடைந்துள்ளது.

மாமனாரின் கத்திக்குத்தில் மருமகன் பலி!

மாமனாரின் கத்திக்குத்தில் மருமகன் பலி!

போக்குவரத்து பாதிப்பு

கடந்த( 06.02.2026)ஆம் திகதி அன்று பெய்த கடும் மழையினால் இவ்வீதியில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு உடைந்து போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, பிரதேச சபை தவிசாளரின் நேரடி மேற்பார்வையின் கீழ் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி தற்காலிகமாக இவ்வீதி சீர்செய்யப்பட்டு பாவனைக்கு விடப்பட்டது.

தாழிறங்கிய வேத்துச்சேனை பகுதி வீதி! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Opening Of The Airlocks Of Navagirikulam Batti

மீண்டும் நவகிரி குளத்தின் வான் கதவுகள் 6 அடி திறக்கப்பட்டமையினால் ஏற்பட்ட அதிக நீர் வரத்து காரணமாக, தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வீதிப்பகுதி இன்று காலை மீண்டும் அடித்துச் செல்லப்பட்டு தாளிறங்கியது.

வேத்துச்சேனை கிராம மக்களுக்கான ஒரேயொரு போக்குவரத்துப் பாதை இது என்பதால், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் தற்போது அறுவடைப் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலில் ஒன்றுகூடவுள்ள அரசின் முக்கிய பிரமுகர்கள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலில் ஒன்றுகூடவுள்ள அரசின் முக்கிய பிரமுகர்கள்

சீர்செய்யும் பணிகள்

மக்களின் அத்தியாவசியத் தேவையைக் கருத்திற்கொண்டு, இன்று வெல்லாவெளி பிரதேச சபையின் கனரக வாகனங்களின் உதவியுடன் வீதியைச் சீர்செய்யும் பணிகள் அவசரமாக முன்னெடுக்கப்பட்டன.

தாழிறங்கிய வேத்துச்சேனை பகுதி வீதி! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Opening Of The Airlocks Of Navagirikulam Batti

இப்பணிகளில் பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன்,வெல்லாவெளி வட்டார உறுப்பினர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்கள் வீதியை மீண்டும் போக்குவரத்துப் பாவனைக்கு ஏற்றவாறு சீர் செய்துவழங்கியுள்ளனர்.

ஒவ்வொரு முறையும் வான் கதவுகள் திறக்கப்படும்போது இவ்வீதி சேதமடைவது தொடர்கதையாக உள்ளதால், இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வாகப் பாலம் அல்லது பெரிய அளவிலான கல்வெட்டுகளை அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்

GalleryGalleryGallery
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US