எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு நாட்டில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு எடுக்கப்படவுள்ள நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
அதன்படி அடுத்த திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு, அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை இணையத்தள முறையில் இயக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் குறித்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஸ்தம்பிதமடைந்து முடக்கநிலைக்கு செல்லும் நாடு! வெளியானது பகிரங்க எச்சரிக்கை |
பாடசாலைகளுக்கு விடுமுறை
இதேவேளை எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுஸில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
ஊரடங்கு தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
நாட்டை முடக்கவோ, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவோ அவசியமில்லை! ஜனாதிபதி, பிரதமர் கூட்டாக அறிவிப்பு |
என்ற போதும் முடக்க நிலையோ ஊரங்கு சட்டமோ அமுல்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளனர்.
அடுத்த வாரம் மற்றுமொரு எரிபொருள் கப்பல் நாட்டிற்கு வரவுள்ளதால், நாட்டை முழுமையாக மூடவோ, ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவோ தேவையில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவித்துள்ளனர்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
