நாட்டை முடக்கவோ, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவோ அவசியமில்லை! ஜனாதிபதி, பிரதமர் கூட்டாக அறிவிப்பு
நாட்டை முடக்குவதற்கோ அல்லது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கவோ அவசியமில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு தீர்வாக நாட்டை முடக்கவோ அல்லது ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கவோ வேண்டிய தேவை கிடையாது என தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் வாரங்களில் நாட்டுக்கு எரிபொருள் கிடைக்கப் பெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைகள் மற்றும் பொதுத்துறை சேவைகளை இணைய வழியில் நடாத்த யோசனை
ஊரடங்குச் சட்டத்தையோ அல்லது முடக்க நிலையையோ அறிவிக்க வேண்டுமா என அதிகாரிகளும், அமைச்சர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.அவ்வாறான அவசியம் எதுவும் இல்லை என பிரதமர் ஜனாதிபதியும் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும், எதிர்வரும் இரண்டு வார காலத்திற்கு பாடசாலைகள் மற்றும் பொதுத்துறை சேவைகளை இணைய வழியில் நடாத்துவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எவ்வாறெனினும், இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
