பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றம்! 21 தொடர்பில் ஜனாதிபதியின் முனைப்பு!
ஜனாதிபதியின் கலந்துரையாடல்
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்தை தாமதமின்றி முன்வைப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் இன்று மாலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியின் மாளிகையில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
[
பொதுமக்கள் ஏமாற்றம்
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட ஆளும் கட்சித் தலைவர்கள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ள உள்ளனர்.
நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னைய அமைச்சரவையை கலைக்கப்பட்டு, புதிய அமைச்சரவையை நியமிக்கப்பட்டது
இதன் பின்னர் புதிய பிரதமரும் நியமிக்கப்பட்டார்.
எனினும் 21வது திருத்தச் சட்டத்துக்கு மாத்திரம் அமைச்சரவை இன்னும் அங்கீகரிக்காமை பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக முன்னிலை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.