ஸ்தம்பிதமடைந்து முடக்கநிலைக்கு செல்லும் நாடு! வெளியானது பகிரங்க எச்சரிக்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக முழு நாடும் முடக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக கல்விசாரா ஊழியர் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் திலகரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு மத்தியில் கடமைக்கு சமூகமளிப்பதில் அரச ஊழியர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இலங்கையிடம் 6,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
நாடு முடங்குமென எச்சரிக்கை
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது.
இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், எதிர்காலத்தில் நாடு ஸ்தம்பிதமடைந்து முடக்கநிலைக்கு செல்லும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் முடக்க நிலையை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிடாத போதிலும், தொலைநோக்கற்ற முடிவுகளால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க இயாலாமையின் விளைவால் அவ்வாறான நிலைமைகள் உருவாகும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை முடக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு
எனினும் நாட்டை முடக்குவதற்கோ அல்லது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கவோ அவசியமில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டை முடக்கவோ, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவோ அவசியமில்லை! ஜனாதிபதி, பிரதமர் கூட்டாக அறிவிப்பு |
நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு தீர்வாக நாட்டை முடக்கவோ அல்லது ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கவோ வேண்டிய தேவை கிடையாது என தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam