மட்டக்களப்பில் கடற்றொழிலுக்காக சென்ற 19 வயது இளைஞன் மாயம்
களுவாஞ்சிகுடி கடலில் கடற்றொழில் படகில் சென்ற 19 வயது இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு சென்ற குறித்த இளைஞன் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் நேற்று (24) முறைப்பாடு செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
படகு கண்டுபிடிப்பு..
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை ஸ்ரீமுருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் சம்பவ தினமான சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடற்றொழிலுக்காக சிறிய படகில் தனியாக சென்றுள்ளார்.

இருப்பினும் இளைஞன் வீடு திரும்பாத நிலையில், குறித்த கடற்பகுதிக்கு படகில் கடற்றொழிலாளர்கள் சென்று தேடியுள்ளனர்.
இதன்போது படகை கண்டுபிடித்த போதிலும் இளைஞன் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
அமெரிக்க தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு - மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சரமாரி தாக்குதல் News Lankasri