முள்ளியவளையில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்
முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிப்பு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முறிப்பு பகுதியில் உள்ள 42 அகவையுடைய தெய்வேந்திரம் புவனேந்திரராசா குமுழமுனை வீதி முறிப்பு பகுதியில் வீட்டில் வசித்துவந்த வேளை வீட்டிற்குள் புகுந்த நபர் வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.
இதன்போது படுகாயமடைந்தவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை,இந்த வாள் வெட்டினை மேற்கொண்டவர் என சந்தேகிக்கப்படும் நபர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
