விபத்தொன்றினை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற சந்தேக நபர் ஒருவர் கைது
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விபத்தொன்றினை ஏற்படுத்தி விட்டுத் தப்பிச்சென்ற சந்தேக நபர் ஒருவரை இன்று(8) கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜயந்திபுர, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேகநபர் நேற்று(7) வீதியால் சென்ற எட்டு வயதுடைய சிறுமியை ஒருவரை மோதி விட்டுத் தப்பிச்சென்றுள்ள நிலையிலே விபத்து தொடர்பாக சேருநுவர பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காணொளிகளைப் பரிசோதனை செய்த நிலையில் சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு மூதூர் நீதிமன்ற
நீதிவான் முன்னிலையில் முன்னிறுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



