ஆலய பூசகர் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் பலி: மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
வாகரை - மாங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள பௌத்த பத்தினி வழிபாட்டு ஆலயத்திற்கு குறித்த இருவரும் சென்ற போதே தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நோயை குணப்படுத்தும் செயற்பாடு
இந்நிலையில், ஆலய பூசகர் மேற்கொண்ட தாக்குதலில் மட்டக்களப்பு புனானை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய அனுர ஜெயலத் என்பவர் உயிரிழந்ததுடன் அவரது சகோதரியான 61 வயதுடைய சுமிதா ஜரங்கனி என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், காலில் மின்சார தாக்குதலால் ஏற்பட்ட நோயை குணப்படுத்துவதற்காக குறித்த ஆலயத்துக்கு அடிக்கடி சென்று நோயை குணப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணை
இந்நிலையில் பூசகரின் மனைவியுடன் உயிரிழந்தவருக்கு ஏற்பட்ட தகாத உறவின் காரணமாகவே தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேகநபரான பூசகர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று வியாழக்கிழமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
என்னை விமர்சிக்கும் முட்டாள்களுக்கு பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை: சபையில் சாணக்கியன் பதிலடி(Video)
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam