பிரித்தானிய தமிழர் அமைப்பு ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு
புதிய இணைப்பு
சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பானது நேற்றைய தினம்(07.12.2023) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த சந்திப்பில் அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய “இமயமலைப் பிரகடனம்” ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
என்னை விமர்சிக்கும் முட்டாள்களுக்கு பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை: சபையில் சாணக்கியன் பதிலடி(Video)
நல்லிணக்கம், மறுசீரமைப்பு
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 06 முக்கிய விடயங்களை “இமயமலைப் பிரகடனம்” உள்ளடக்கியுள்ளது.
இந்த பிரகடனத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னர் இது தொடர்பில் மூன்று நிகாயக்களின் தலைமைத் தேரர்களுடன் கலந்துரையாடுவதாகவும், ஏனைய மதத் தலைவர்களுக்கும் இது குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் இங்கு குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
பல வருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் கடந்த பொருளாதார நெருக்கடிக்கும் முகங்கொடுத்து பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.
ஆனால், பொருளாதார நெருக்கடியின்போது, எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் கசப்பான அனுபவங்கள் ஒரு சில மாதங்கள் நீடித்த்தது. வடக்கு - கிழக்கு மக்கள் இதனை பல வருடங்களாக அனுபவித்தனர்.
புதிய நாட்டைக் கட்டியெழுப்பும்போது புதிய பொருளாதாரம் அவசியம். இமயமலைப் பிரகடனம் போன்ற வெளியீடுகள் முக்கியமானவை. ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மை இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது.
மேலும். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியைப் பாதித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.
நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் செயற்திட்டத்தைப் பாராட்டிய உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள், அதற்கு தமது முழு பங்களிப்பை வழங்கப்படும்.
எனது ஆட்சிக்காலத்தில் “இமயமலைப் பிரகடனம்” வெளியிடக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது.” என்றார்.
முதலாம் இணைப்பு
நல்லிணக்க செயல்முறைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவும் வகையில் சுரேன் சுரேந்திரன் தலைமையிலான பிரித்தானியாவை தளமாகக் கொண்ட உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் சுரேன் சுரேந்திரன் குழுவினர் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.
அத்துடன், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மஹா நாயக்க தேரர்களையும் சந்தித்து கலந்துரையாட உள்ளதுடன், சிவில் சமூகத்தினரையும் சந்திக்க உள்ளனர்.
சமாதான பேரவையுடனான சந்திப்பு
இதன் பிரகாரம் தேசிய சமாதான பேரவையுடனான சந்திப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
இதேவேளை வடக்குக்கு விஜயம் செய்ய உள்ளதுடன் அரசியல் மற்றும் சிவில் பிரதிநிதிகளை சந்தித்து நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாட உள்ளனர்.
புலம்பெயர் இலங்கையர்கள் நாட்டின் அபிவிருத்தி திட்டங்களில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தது.
குறிப்பாக கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் போது ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் பின்னர் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை, இலங்கையின் உள்ளக அபிவிருத்தி திட்டங்களுக்குள் உள்வாங்கும் இலக்கினை ஜனாதிபதி ரணில் துரிதப்படுத்தியிருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில் அதற்கானதொரு அலுவலகத்தை ஜனாதிபதி ரணில் ஸ்தாபித்துள்ளார். அந்த அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகமாக இலங்கையின் மூத்த இராஜதந்திரிகளின் ஒருவரான வீ.கிருஸ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த அலுவலகத்தின் ஊடாகவே உலக தமிழர் பேரவை அரசாங்கத்தை அணுகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |