நானுஓயா பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்
நுவரெலியா பிரதான வீதிக்குட்பட்ட நானுஓயா பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் பாமஸ்டன் பகுதியில் காரும்,முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்டதில் முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியாவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த காரின் மீது லிந்துலை பகுதியில் இருந்து நானுஓயா பகுதிக்கு பயணித்த முச்சக்கர வண்டி மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக விபத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.
லிந்துலை பகுதியில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி முன்னால் பயணித்துக் கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் எதிர் திசையில் வந்த காருடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பாக நானுஓயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri