முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, தேவிபுரம் ஆ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவமானது நேற்று(17.02.2024) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது தேவிபுரம் ஆ பகுதியினை சேர்ந்த 55 வயதுடைய விநாயகம் என அழைக்கப்படும் சி.சிவபாஸ்கரன் என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
புதுக்குடியிருப்பு தெங்கு பனைகூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராக கள்ளு இறக்கும் தொழில் செய்துவரும் குறித்த நபர் நேற்று(17) மாலை கள்ளினை இறக்கி தவறனைக்கு கொண்டு சென்றுகொடுத்துவிட்டு திரும்பும் வழியில் தேவிபுரம் ஆ பகுதியில் உள்ள வீதியில் குறுக்கே விழுந்து கிடந்த மரக்கட்டையில் அவர் பயணித்த உந்துருளி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam