கட்டுநாயக்க விமான நிலையத்தில் காத்திருந்தவரின் செயல் அம்பலம்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வாகன தரிப்பிடத்தில் காத்திருந்து, விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் கொண்டு வந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களை குறைந்த விலையில் பெற்றுக் கொண்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வாங்கிய சுமார் 15 லட்சம் ரூபாய் பெறுமதியான 107 மதுபான போத்தல்களுடன், திணைக்கள அதிகாரிகள் குழுவினால் நேற்று காலை குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
கட்டுநாயக்க பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய இந்த நபர் வெளிநாட்டு மதுபான போத்தல்களை பெற்றுக்கொண்டு வெளிநாடுகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மதுபான போத்தல்கள்
கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்களின் ரெட் லேபிள், ஜெக் டேனியல் மற்றும் விஸ்கி போத்தல்கள் அதிகளவில் காணப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபரையும் அவரிடமிருந்த வெளிநாட்டு மதுபான போத்தல்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
