நீரை சுத்திகரிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை
சீரற்ற காலநிலை காரணமாக மாசடைந்துள்ள நீரை சுத்திகரிப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நீரை சுத்திகரிப்பதற்கு பயன்படுத்தப்படும் க்ளோரினுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுச் சுகாதார பரிசோதர்கள் ஒன்றியத்தின் பிரதானி உபுல் ரோஹன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
க்ளோரின் தட்டுப்பாடு
க்ளோரின் தட்டுப்பாடு நீரை சுத்திகரிக்கும் பணிகளுக்கு பெரும் இடையூறாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
வெள்ளம் காரணமாக தொற்று நோய்கள் ஏற்படக் கூடும் எனவும் மக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
எலிக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவும் சாத்தியங்கள் அதிகமாக காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மரக்கறி மற்றும் பழ வகைகளை நன்றாக கழுவி பயன்படுத்துமாறும், கொதித்து ஆறிய நீரை பருகுமாறும் உபுல் ரோஹன அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |