கனடா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற யாழ். இளைஞனுக்கு நேர்ந்த கதி
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இளைஞனை குடிவரவு அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமான அனுமதியை முடித்துவிட்டு குடிவரவு கவுண்டருக்கு வந்து அங்கு பணிபுரியும் குடிவரவு அதிகாரியிடம் கடவுச்சீட்டை வழங்கிய போது, கடவுச்சீட்டில் உள்ள புகைப்படத்திற்கும் அவரது புகைப்படத்திற்கும் வித்தியாசம் காணப்பட்டதால், கடவுச்சீட்டு பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறியும் வகையில், குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உள்ளிடப்பட்டுள்ளன.
நீதிமன்ற தடை உத்தரவு
இதன்போது கடவுச்சீட்டை வைத்திருப்பவர் நாட்டை விட்டு வெளியேற திருகோணமலை நீதிமன்றம் தடை விதித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதன்படி, இந்த இளைஞனை குடிவரவு திணைக்களத்தின் எல்லை அமுலாக்கல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனையடுத்து குறித்த இளைஞனின் பெட்டியினை சோதனை செய்தபோது அவரது உண்மையான தேசிய அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கனடா சென்ற பின்னர் அனுராதபுர நகரத்தில் உள்ள தரகர் ஒருவர் தனக்கு ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாவை தருவதாக உறுதியளித்து கனடாவில் செல்லுபடியாகும் இந்த கடவுச்சீட்டை பெற்றுக்கொடுத்ததாக இளைஞன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |