யாழில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி(Photos)
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று(10.09.2023) கோப்பாய் இராச வீதியில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதில் மோட்டார் சைக்கிளின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்தின் சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam