பேருந்து நிலையத்தில் நின்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி..! சோகத்தில் குடும்பத்தினர்..
வவுனியா - ஓமந்தை - ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(01.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று(01) அதிகாலை ஓமந்தை, பனிக்கன் நீராவி பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்றிருந்த நபர் ஒருவர் மீது, வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஒருவர் உயிரிழப்பு
இந்த விபத்தில், பனிக்கன் நீராவி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஏ9 வீதியில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களும் உயிரிழப்புகளும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri