புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் நடைமுறைக்கு வரும் தடை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவுக்குள் முதல் முடிவுறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களு 5ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நடைமுறைக்கு வரும் தடை
இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சைக்கான பயிற்சி வகுப்புக்கள், கருத்தரங்குகள், விரிவுரைகள் உள்ளிட்டவை 5ஆம் திகதி நள்ளிரவுக்கு முதல் முடிவுறுத்தப்பட வேண்டும்.
குறிப்பிட்ட காலத்தில், புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாதிரி வினாக்களைக் கொண்ட வினாத்தாள்களை அச்சிடுவதும் விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இணைய இணைப்புக்களின் ஊடான கல்வி நடவடிக்கைகள் உள்ளிட்டவையும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது,
எதிர்வரும் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri