யானை தாக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி - உன்னிச்சையில் சம்பவம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நெடியமடு கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலியாகியுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆயித்தியமலையில் வசித்து வரும் கோயில்போரதீவைச் சேர்ந்த(54 வயதுடைய) மு. விசயராசா என்பவரே இவ்விபத்தில் பலியாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை
நெடியமடு வைத்தியசாலைக்கு முன்னால் பிரதான வீதியில் நின்ற காட்டு யானை தாக்கியமையினாலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் பலியாகியதுடன், அதற்கு முன்னர் சில
வாரங்களுக்கு முன் அடைச்சகல் பகுதியில் ஒருவரும் பலியாகியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
க்ரிஷ் அம்மா இறந்துவிட்டார்... ரோகிணி போட்ட திட்டம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam