புத்தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்
புத்தளம் - ஆனமடுவைப் பிரதேசத்தில் இடம்பெற்றத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவமானது ஆனமடுவை பிரதேசத்தில் உள்ள நத்தேவ பகுதியில் நேற்று (08.02.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஆனமடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான நபர் ஒருவரே காயமடைந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
இரண்டு நபர்களுக்கு இடையில் தனிப்பட்ட பிணக்கு ஒன்றின் காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் துப்பாக்கிச் சூட்டில் முடிவடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உடனடியாக ஆனமடுவை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri