திருவிழா கைக்கலப்பில் ஒருவர் மரணம்! இருவர் காயம்
மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் ஆலய திருவிழாவில் இடம்பெற்ற மோதல் காரணமாக இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கருணாரத்ன தெரிவித்முள்ளார்.
வாகனேரி திரௌபதி அம்மன் ஆலயத்தில் சடங்கு உற்சவம் இடம்பெற்ற போது ஆலயத்தில் சிலருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கலவரடாக மாறியுள்ளது.
உயிரிழந்தவர்களின் விபரம்
இந்த மோதலில் காயமடைந்த வாகனேரி குளத்துமடு முருகன் ஆலய வீதியினைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் மரணமடைந்துள்ளதுடன், 19 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மற்றையவர் கிசிச்சையின் பின்னர் வீடு சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மரணமடைந்த இளைஞனின் சடலம் பிரேத பரிதோனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும், குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியுமான கருணாரத்ன தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
