நல்லூர் தேர் உற்சவத்தின் போது ஐவர் கைது
யாழ்ப்பாணம் - நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர் உற்சவத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேநபர்கள் நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளின் பின்னர் நல்லூர் கந்தனின் தேர்ப் பவனி நேற்றைய தினம் பல்லாயிரக்கணக்கான அடியார்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றிருந்தது.
தேர் உற்சவத்தில் திருட்டு சம்பவம்
இந்த நிலையில் சன நெரிசலை சாதகமாக்கிய திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். 2 தாலிக் கொடி மற்றும் சங்கிலிகள் உட்பட 30 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக நல்லூர் உற்சவகால பொலிஸ் காவலரணில் 7 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நீர்கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவர் சங்கிலி அறுக்க முற்பட்டபோது கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளார்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நீர்கொழும்பைச் சேர்ந்த மேலும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பொலிஸாரின் விசேட தேடுதல் நடவடிக்கையின்போது கோப்பாயைச் சேர்ந்த 15
வயதுச் சிறுவனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 3 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
