வெகு விமர்சையாக இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் (Video)
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் இன்று காலை ஷண்முக தீர்த்த கேணியில் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது பிள்ளையார், அலங்காரவேலன், வள்ளி, தெய்வானை, சண்டேஷ்வரபெருமான் ஆகிய தெய்வங்களுக்கு வசந்த மண்டபத்தில் விஷேட அபிஷேங்கள், ஆராதனைகள் இடம்பெற்றிருந்தன.
இதனை தொடர்ந்து முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதரராக பிள்ளையார் மற்றும் சண்டேஷ்வரருடன் உள்வீதி, வெளிவீதி வலம் வந்து வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆலய மஹோற்சவம் கடந்த 02.08.2022 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்த நிலையில் நேற்றைய தினம் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் தீர்த்தோற்சவம் இடம்பெற்றுள்ளதுடன், இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருளை பெற்றிருந்தனர்.
மேலதிக தகவல், புகைப்படங்கள் - தீபன்
![Gallery](https://cdn.ibcstack.com/article/aea5ae80-2d7b-4cd9-9d54-8b1ce9e53002/22-630875de40092.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/3d144393-aac5-499f-9af9-22251bc57750/22-630875de760d2.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/93d7a16d-f499-46a5-8d6d-160c1dc05a48/22-630875deb1e0a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/d18d696e-4939-413e-a430-8723870236d5/22-630875dee2145.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/74a9eb47-b566-48a4-ae79-08c16fb4b5ef/22-630875df382a5.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f26e5583-fbba-4a2b-8708-06d6fc0f8c90/22-630875df6e1af.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/541194a5-e975-4748-a2e6-7cd5dcef1229/22-630875dfa94ef.webp)
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)