மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் (Photos)
மட்டக்களப்பு- மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச
செயலாளரின் செயற்பாடுகளினால் பொதுமக்களுக்கு சேவைகள் வழங்குவதில் நெருக்கடியை
எதிர்கொள்வதன் காரணமாக அவரை இடமாற்றம் செய்து சிறந்த ஒரு அதிகாரியை நியமனம்
செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும் என்ற தீர்மானமொன்று மண்முனை தென்
எருவில் பற்று பிரதேசசபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் இன்று(26) மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையில் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரதேசசபையின் சம்பிரதாயங்களுடன் மாதாந்த சபை அமர்வின் போது, புதிய உபதவிசாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள மே.வினோராஜிக்கு வரவேற்பளிக்கப்பட்டதுடன் சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
சபையின் தீர்மானங்கள்
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் அனுமதியில்லாமல் சில அமைப்புகள்
பெயர்ப்பலகை நடுகை செய்வது குறித்தும் அதில் பிரதேசசபையின் சின்னம் மற்றும்
பெயர்களை பயன்படுத்துவது குறித்தும் இன்றைய அமர்வின்போது பல்வேறு கருத்துகள்
தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதன்போது வைக்கப்பட்ட பெயர்ப்பலகை குறித்து கேள்வியெழுப்பிய பிரதேசசபை உறுப்பினர்களை சிலர் அவதூறாகப்பேசிய விடயங்களுக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதுடன் அவ்வாறானவர்களை அழைத்துபேசவும் தீர்மானிக்கப்பட்டது.
பிரதேசசபையின் ஊடாக ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள குடும்பத்தினை தலைமை தாங்கும் பெண்களை தெரிவுசெய்து அவர்களுக்கான வாழ்வாதார திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பிரேரணை
இதன் போது பிரதேச சபையின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என கிராம சேவையாளர்களுக்கு பிரதேச செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதேச செயலாளர் தொடர்ச்சியாக பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் கௌரவ உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில் செயற்பட்டு வருவதுடன் பிரதேச சபையின் செயற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலேயே செயற்படுவதாகவும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புதிய உபதவிசாளரினால் பிரேரணை ஏற்றுக்கொள்ளபடல்
இதற்கமைய உபதவிசாளர் மே.வினோராஜினால் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்து புதிய பிரதேச செயலாளரை நியமிக்க வேண்டும் என்ற பிரேரணை சபையினால் ஏகமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தினை ஜனாதிபதி மற்றும் அமைச்சுகளுக்கு அனுப்புவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் சபை அமர்வின் போது பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
