கேரள கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது(Photo)
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பகுதியில் சுமார் 203 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
முழங்காவில் கடற்படை முகாம் அதிகாரிகளால் நேற்று(11) திங்கட்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சோதனை
சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த 45 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
சந்தேகநபரை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலுப்பைக் கடவை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.