கொழும்புக்கான சேவையை நிறுத்திய முன்னணி விமான நிறுவனம்
ஓமான் எயார் விமான நிறுவனம் கொழும்புக்கான தனது விமான சேவையை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
பொருளாதார ரீதியில் தமது விமான சேவைகளை வலுப்படுத்தும் விதமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான நேர அட்டவணை
அத்துடன் அதிகரித்துவரும் போட்டிச் சந்தையில் தனது நிலையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று விமான நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஓமன் எயர் அதன் வலையமைப்பில் பல மூலோபாய மாற்றங்களை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இதேவேளை கோடை காலத்தை முன்னிட்டு விமானப் பயணங்களின் நேர அட்டவணையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நேரடி பயணிகளுக்கு அதிக வசதியை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவை அதிகரிப்பு
அத்துடன் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் மற்றும் பங்களாதேசத்தின் சிட்டகாங் ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகளும் இரத்து செய்யப்படுள்ளது
அதேவேளை இந்தியாவின் லக்னோ மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இரண்டு இடங்களுக்கு தனது விமான சேவைகளை அதிகரிக்க ஓமன் எயர் தீமானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.