நாட்டில் அறிமுகமாகவுள்ள புதிய வரி: நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்
2025 ஆம் ஆண்டு புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
பொருட்களின் விலை
எதிர்காலத்தில் மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது வரி சதவீதத்தை அதிகரிக்கவோ எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை என்றும் அரச வருமானத்தை அதிகரிக்கவே எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் மறைமுக வரி விதிப்பால் பொருட்களின் விலை உயராது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருட்களின் தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் பொருட்களின் விலை நிர்ணயிக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சொத்து வரி
இதேவேளை, 2025 ஆம் ஆண்டு புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சொத்து வரி என்பது நேரடி வரி என்றும் அதிக சொத்து வைத்திருப்பவர்களிடம் வசூலிக்கப்படும் குறிப்பிட்ட தொகை தான் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam