கரட்டைத் தொடர்ந்து தக்காளி விலை திடீரென அதிகரிப்பு
நாட்டில் கரட் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து தக்காளியின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மேற்கோள்காட்டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
விலை அதிகரிப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தக்காளியின் மொத்த விலை
கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி பயிர் நாசமடைந்துள்ளது.
எனவே பசுமைக்குடில்களில் பயிரிடப்பட்ட மரக்கறி பயிர்களே இந்நாட்களில் சந்தைக்கு எனவே பசுமைக்குடில்களில் பயிரிடப்பட்ட மரக்கறி பயிர்களே இந்நாட்களில் சந்தைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரக்கறி விலை பட்டியல்
நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய மொத்த விற்பனை நிலையங்களில் (29) விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் மொத்த விலை பட்டியலை மத்திய நிலைய காரியாலயம் வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் கரட் 1350/=, சீமை தக்காளி 800/=, சுக்கினி 550/=, சிவப்பு ராபு 1100/=,புரகோலின் 4100/=, ரோஸ்மேரி 550/=, பாசலி 1500/=, மிஞ்சி இலை 800/=, சிவப்பு சலாது 1800/=, ஐஸ்பேக் 2600/=, சல்திரி 1200/=, பெஸில் இலை 3100/=, குடைமிளகாய் சிவப்பு 1900/=, குடைமிளகாய் மஞ்சல் 1900/=
குடைமிளகாய் பச்சை 1300/=, சிவப்பு கோவா 3700/= என விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லீக்ஸ் 460/=, கோவா 520/=, ராபு 170/=, இலையுடன் பீட் 470/=, இலை அகற்றிய பீட் 570/=, உருளைகிழங்கு 320/=, சிவப்பு உருளைகிழங்கு 340/=, நோக்கோல் 370/= என மொத்த விற்பனை விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |