ஒலிம்பிக் பளுதூக்குதலில் பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா
ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா இதுவரை 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
இதில், பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைபிரிவுக்கான போட்டியில், இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்றார்.
வெண்கலப் பதக்கம்
இவர், ஸ்ட்ரச் பிரிவில் 88 புள்ளி கிளீன் அண்ட் ஜர்க் பிரிவில் 111 புள்ளிகள் என மொத்தம் 199 புள்ளிகள் பிடித்து 4ம் இடம் பிடித்தார்.
114 கிலோவை தூக்கும் இறுதி முயற்சியில் மீராபாய் சானு தோல்வி அடைந்தார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக மீராபாய் சானு 199 புள்ளிகளுடன் 4 ஆம் இடம் பிடித்தார்.
இதே சுற்றில் பங்கேற்ற தாய்லாந்து வீராங்கனை, மீராபாய் சானுவை விட ஒரு புள்ளி (200 புள்ளிகள்) அதிகமாக பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். ஒருபுள்ளி வித்தியாசத்தில் மீராபாய் சானு பதக்க வாய்ப்பை இழந்தார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
