உடைந்த பதக்கங்களால் அதிருப்தியில் ஒலிம்பிக் வீரர்கள்
2026 மிலான் - கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள் சேதமடைந்தது குறித்து, அதன் ஏற்பாட்டாளர்கள் தற்போது "தீவிர கவனம்" செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
பல வீரர்கள் தங்களது பதக்கங்களில் குறைபாடுகள் இருப்பதாக முறைப்பாடளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பதக்கங்களின் தரம் மற்றும் வடிவமைப்பு
அமெரிக்காவை சேர்ந்த தங்கம் வென்ற வீராங்கனைகளான ப்ரீசி ஜோன்சன் (Breezy Johnson) மற்றும் அலிசா லியு (Alysa Liu) ஆகியோர், பதக்கம் பெற்ற சிறிது நேரத்திலேயே ரிப்பன் துண்டிக்கப்பட்டதை வெளிப்படுத்தினர்.

இந்த சம்பவங்கள் தடகள வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், பதக்கங்களின் தரம் மற்றும் அதன் வடிவமைப்பு குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என ஒலிம்பிக் நிர்வாகக் குழு உறுதியளித்துள்ளது.