கந்தளாயில் யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் பலி
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (20.09.2023) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கந்தளாய் - வெவ்சிறிகம பகுதியைச் சேர்ந்த தெபிலியனகே விமலரத்ன (69 வயது) எனவும் தெரியவருகிறது.
பொலிஸார் விசாரணை
வீட்டிலிருந்து நடந்து கடைக்கு சென்று கொண்டிருந்தபோது இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை அதே பகுதியைச் சேர்ந்த தியவுல்பொத்த என்ற இடத்தில் பொலிஸ் SI ஒருவரும் யானையின் தாக்குதலினால் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை- பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
கஜேந்திரனுக்கு நேர்ந்த கதியே நாளை சுமந்திரன் - சாணக்கியனிற்கு இடம்பெறலாம்! பகிரங்க எச்சரிக்கை! (video)
| நட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் வசூல் விவரம்.. 23 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் Cineulagam