யாழில் வீதியில் மயங்கி விழுந்த முதியவர் பரிதாபமாக உயரிழப்பு
யாழில் (Jaffna) கடற்கரை வீதியில் மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (01) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - ஈச்சமோட்டையை சேர்ந்த 75 வயதான க. கியூமர் என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார்.
குறித்த முதியவர், கடந்த 27ஆம் திகதி பிறந்தநாள் நிகழ்வு ஒன்றுக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் கடற்கரை வீதியூடாக வீட்டுக்கு சென்றுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
இதன்போது, அவருக்கு திடீரென தலைச்சுற்று ஏற்பட்டு கீழே விழுந்துள்ள நிலையில் இரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் அவர் உயிரிழந்துள்ளதுடன் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கமைய, தலையில் அடிபட்டதாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிய வந்துள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
