சட்டவிரோத போதைபொருள் உற்பத்தியாளரால் வயோதிபர் ஒருவர் மீது தாக்குதல்
முல்லைத்தீவு (Mullaitivu) - முள்ளியவளையில் கால்நடை மேச்சலுக்காக சென்ற வயோதிபர் மீது கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளும் கும்பலை சேர்ந்த ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று (26.12.2024) மாலை புதறிகுடா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
73 அகவையுடை வற்றாப்பளையினை சேர்ந்த வயோதிபர் ஒருவர் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
முள்ளியவளை - வற்றாப்பளை பகுதிகளில் கால்நடைகளை மேய்ப்பதற்கான சரியான மேச்சல்தரவை இல்லாத நிலையில் குறித்த வயோதிபர் தனது கால்நடைகளை வற்றாப்பளை வயல்வெளி மற்றும் புதறிகுடா பற்றைக்காடுகள் பகுதிகளில் மேச்சலுக்காக விடுவது வழமை.
அந்தவகையில், நேற்று மேய்ச்சலுக்காக கால்நடைகளை விட்டுவிட்டு அவற்றை பட்டிக்கு அழைத்துக்கொண்டு வருவதற்காக புதறிகுடா பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், அந்த வீதியால் உந்துருளியில் சுத்தி திரிந்த ஒருவர் வயோதிபரை அப்பகுதியில் நிற்கவேண்டம் என மிரட்டியுள்ளதுடன் பின்னர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட வயோதிபர் அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவமனை பொலிஸார் அவரிடம் வாய்முறைப்பாட்டினை பெற்றுள்ளார்கள்.
மேலும், முள்ளியவளை - புதறிகுடா பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திசெய்யப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்து காணப்படுவதுடன் முள்ளியவளை பொலிஸார் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 8 மணி நேரம் முன்

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
